பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 கூழ்கிடைத் தாலும் குடித்து விட்டு வாழ்ந்திட வழிகள் வகுக்கின் ருேமே! பெற்று வளர்த்த பெரியோர் சாவிற் குற்ற துயரில் ஒருநாட் போயின் மற்ற நாளெலாம் மகிழ்கின் ருேமே! மனைவி யிறந்த மறுமா தத்தே நினைவு மறக்கவும் நெஞ்சு குளிரவும் புதுவாழ் வின்பம் புகுந்து திளேக்கவும் மதிமுக வெழில்நகை மங்கை பொருத்தியை மறுமணம் செய்து மனமகிழ் வுற்றுக் குறுநகை என்றும் கொள்கின் ருேமே! ஆளுல் கணவனை யிழந்த காரிகை மட்டும் உணவைக் குறைத்தும் வெள்ளுடை யுடுத்தும் இயற்கை யன்ன எழிலின் முடியெனப் பயந்த கருங்குழல் பறிக்கப் பெற்றும் தான்செயாக் குறைக்கவள் நோன்பிருந் துந்தன் ஊனுடல் வருத்தியும் உளத்துய ருற்றும் வாழ் நாள் முற்றும் வாடிய மலராய்ப் பாழ்பட லாமோ? பாழ்பட லாமோ? கல்மணங் கொண்டோ கருதா திருத்தீர் பல்சால் மிரே! பல்சான் றிரே!