பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 255 அழுது விட்டாள் போர்க்களத்தில் புகுந்துபகை மறவ ராலே பொன்னுயிரை யிழந்த அவள் அத்தான் போட்ட வீர உடல் தனக்கொணர்ந்து வீட்டி விட்டு விளைவையெதிர் பார்த்திருந்த அணங்கி னர்க்கே ஆர்த்தழுதல் இன்றியவள் அமைதி பூண்ட அந்நிலையே பெருவியப்பை எழுப்பிற் முக நேரிழையாள் அழல்வேண்டும். இன்றேல் ஆவி நீப்பளென்ருர் சற்றுமவள் அழவில் லையே! பின் அவளின் அத்தானின் வீரம் பற்றிப் பெருமைபல சொன்னர்கள். புகழ் உடம்பில் இன்னும் நூ ருண்டுபல இருப்ப னென்றும் இணைந்துவாழ் தற்குரிய ஆள னென்றும் தன்னுடைய நண்பர்களுக் குண்மை யான தகவுடையோன் என்றுமவன் பகைவர் போற்றும் நன்னனென்றும் அவனுடைய சீர்த்தி யெல்லாம் நவின்ருர்கள் எனினுமவள் அழவில் லையே! அணங்கொருத்தி இடம்விட்டுப் பெயர்ந்து பின் குல் அடியெடுத்து வைத்துமெல்லச் சென்று வீரன் பினம்.அருகி முகமறைத்துக் கொண்டி ருந்த பெருஞ்சால்வை தன்னநீக்கி விட்டாள். காதற் விண்முகத்தின் வெளுப்புதனேக் கண்ட பேதை பெரும்ஒலம் இட்டழுவாள் எனநினைத்தாள் அளங்குசற்றும் அசையவில்லை; கண்க லக்கம் அடையவில்லை நீளத்தபடி அழவில் இயே!