பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

barri-desdo L57 தெரு வோரப் பாதையிலே! தென்னட்டுத் தலைநகரம் சென்னைத் திரு நகரம் செழிப்பைக் கொஞ்சம் கேளுங்களே சிந்தித்துத்தான் பாருங்களே! தல்லாச் சிந்தித்துப் பாருங்களே! நாறிவரும் கூவம்நதி நடுவோடத் தவம்செய்து பேறுபெற்ற சென்னையிது பெருமைபெற்ற சென்னையிது! புத்தம்புது வீடுகளாம் போய்நீளும் பாதைகளாம் எத்திக்கும் ஓடுகின்ற எழிலான காருகளாம்! தெருவீதி யோரத்திலே இருமருங்கும் நடைபாதை நடைபாதை யோரத்திலே படைபடையாய்க் குடும்பங்களாம்! கெஞ்சிநின்று தொழில்நடத்திக் கிடைத்தமுத்து அரிசிகொண்டு கஞ்சிவடித் துண்பதற்குக் கல்லடுக்கித் தீவளர்ப்பார்! வானகத்துக் கூரையடி வாழ்ந்துவரும் ஞானிகளாம்! ஞானிகளின் குடித்தனமோ நாள்தோறும் பெருகிடுமாம்! தீவளர்க்கும் வேளையிலே திருவளர்க்கும் மழைபொழிந்து போயணைக்கும் பானையிலே பொங்குவதும் கண்ணிரே! வாடைபனி ஒரு நாளில் வந்துநம்மைத் தாக்கிவிட்டால் கோடையிடி போலிருமல் குளிர்காய்ச்சல் வரக்காண்போம்! பனிக்காற்றே தென்றலெனப் படுத்திருக்கும் நடைபாதை மனிதனுக்கு காய்ச்சல்வர மார்க்கமில்லை எனநினைப்போ! தா-17