பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நாச்சியப்பன் பதைபதைக்கும் வெய்யிலிலே பலமுறையும் வெளிச்சென்ருல் சதைகருத்துப் போகுமென உளம்பதைக்கும் சீமானே! தினந்தினமும் வெய்யிலிலே தெருவோரப் பாதையிலே மனந்துணிந்து வாழ்ந்திருக்கும் மனிதருடல் r கருக்காதோ! கட்டழகு மனைவியுடன் காதல்செய்யும் போதினிலே பட்டுமெத்தை கட்டிலுள்ள படுக்கையறை நாடுகின்றீர். வெட்டவெளித் தெருவோரம் விண்மீனின் கண்ணெதிரே கட்டிவைத்த நடைபாதைக் காதலுக்கோர் ஒரமில்லை உடையுமில்லை; உணவுமில்லை; ஒய்ந்திருக்க நிழலுமில்லை; கிடைத்ததையே உண்டிடுவார்; கிழிந்ததையே உடுத்திடுவார்; நடைபாதை யோரத்திலே நலிந்துறங்கிக் கிடந்திடுவார் தடையின்றிப் பிள்ளைபெற்றுத் தாம்வளர்ப்பார்! அயராமல்! வெள்ளையனைப் போகவிட்டு விடுதலையும் வாங்கிவிட்டோம் சள்காயின்றி மனிதரெல்லாம் சமதர்மம் பேசுகின்ருேம். நாடுவளம் பெறவேண்டி நாம்போடும் திட்டமெல்லாம் நீடுநடை பெறவேண்டி நிதிசேர்த்துக் குவிக்கின்ருேம்! கொசுப்படையும் ஈப்படையும் கொஞ்சி விளையாடுகின்ற பிசுபிசுத்த நடைபாதைப் பெருங்குடும்பம் நினைத்தோமா? ஆண்டாண்டாய்த் திட்டமிட்டோம் அழகழகாய்ச் சட்டசபை வேண்டாத வாதங்களிலே வேடிக்கை மனங்களித்தோம் தம்மைப்போல் உருவுடையார் நம்ம்ைப்போல் மதியுடையார் செம்மையில்லா வாழ்வுதனைச் சிந்தித்துப் பார்த்தோமா? நடைப்பிணமாய்க் கிடப்போர்க்கு நல்வாழ்வு - கிடைத்தால்தான் நடைமுறையில் முன்னேற்றம் நாடு பெறக் கூடுவதாம்.