பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 29 எனக் காட்டியிருப்பது உலக வரலாற்று அனுபவ வெளிப் பாடாகக் கருதத்தக்கது. உண்மையான சுதந்திரத்தின் அடையாளத்தை, "..............இந்த நாட்டில் அழுதொருவன் இருக்கும்வரை விடுதலையை அடைந்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும்கூப் பாடே." எனக் கவிஞர் இனங் காட்டுகின்ருர், ஏழை மக்களின் நிலையைக் கவிஞர், "ஏழ்மையெனும் நீரருந்தி உழைத்துழைத்தே இன்பமெனும் நற்குளததில் நீரருந்த வாழ்வினிலே இயலாமல் வாட்ட முற்று வாழுகின்ற பெரும்பகுதி.....' என வருணித்துள்ளார். சுரண்டலற்ற சமுதாய அமைப்பை விழையும் கவிஞர் அதனை அளிக்க வல்லது பொதுவுடை மைக் கொள் கையே என்பதை, "ஆரமுது தினம்படைத்தே யுண்ண வேண்டின் அனைவருக்கும் பொதுவிந்த உலக மென்றே நேரியதோர் கொள்கையினைத் தமிழர் நாட்டில் நிலைக்க வைத்தால் யாவருக்கும் விடுத லைதான்' எனத் தெளிவாகச் சுட்டிவிடுகின்ருர். தமிழரின் முரண்பட்ட வாழ்க்கையான அந்நிய மோகத்தை, - "வீட்டினிலே திருவிளக்கை ஏற்றி வைத்து விழாக்கள்கொண் டாடுதல்தான் தமிழ் வழக்கம் ஊட்டமுடன் ஆங்கிலங் கற்ருேர் விளக்கை ஊதியணேத் துப்பிறந்த நாள் கொண் டாடும் வாட்டமுள்ள பழக்கத்தைக் காணுகின்றுேம் வளர்ச்சிக்கு வழியுண்டோ அடிமைப்போக்கால்'