பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 261 ஏன் போய்ை? பெற்றதாய் நாட்டை விட்டுப் பிறநாட்டுக் கேன்போளுய்?-தமிழா! பிறநாட்டுக் கேன்போய்ை?-தமிழா! பாடுபட்டு மாடெனவே பகலிரவாய் உழைத்தாலும் பனங்காக சேரவில்லை பட்டினி' திரவில்லை தேடுகெட்ட பிழைப்பிதனேக் கேட்பவர்கள் யாருமில்ல்ை கேவலமாய்ப் போனதிந்த வாழ்வெனவே நினைத்தாயோ? பெற்ற தாய்... கடல்கடந்து போனவர்கள் காசுபணம் சேர்த்தார்கள் கண்ணியமாய்த் திரும்பிவந்து காட்சியளித் தார்களென்றே உடன்நீயும் புறப்படவே ஊக்கமிகக் கொண்டாயே உண்மையிலே கண்டதென்ன உத்தமனே சொல்லிடுவாய்! பெற்ற தாய்... -- நாட்டினிலே பொருள்சேர்த்துக் போயிருந்த கொண்டாயோ? புகழோடு சுகமாகப் பூமான்போல் வாழ்ந்தாயோ? ஓயாமல் மறுபடியும் உழைத்துழைத்துத் தேய்ந்ததல்லால் உருவான பலனேதும் உண்டாகக் கண்டாயோ? பெற்ற தாய்...... நீபிறந்த நாட்டைப்போல் நேர்மையுடன் அயலாரை நெஞ்சார வரவேற்கும் பிறநாடென் றெண்ணினையோ? வாய்திறந்து விழுங்குதற்கு வந்துவிட்டான் என உன்னை வஞ்சகரை விரட்டுதல்போல் விரட்டிவிடத் துடித்தாரே! பெற்ற தாய்.....