பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நாச்சியப்பன் நல்லதல்ல பாடம் படித்துவந்தேன் நடந்த செயலொன்றைப் பத்தாக்கிச் சொல்லிடும் வல்லமை பெற்றுவிட்டேன் தொல்புவி யெங்கும் புகழ் பெற்றேன்! தொல்லை யடைந்தவர் வீடுவந்தால் துரத்தும் கருமியைப் பாரியென்று சொல்லும் கவிவாணர் நாவினிலே தோன்றி நடனமிட் டாடிவந்தேன். கற்ற அறிவின் திறத்தாலே கட்சி நிலைக்க வழிதேடிக் குற்றத்தை மாற்றும் வழக்கறிஞர் குடியுள்ள வீடெல்லாம் போயிருந்தேன்! பெட்டிப் பணத்தையே பூட்டிவைத்துப் பிச்சைக்கு வந்தவர்க் கில்லையென்னும் வட்டிக் கடைகாரர் ஏட்டினிலே வாடிக்கை யாகப் படுத்திருப்பேன்! பொன்னுக்குத் தம்முடல் விற்றுவிட்டுப் பூரித்துப் பேசி மகிழ்ந்திருக்கும் மின்னற் கொடிநிகர் வேசையரின் வீடெல்லாம் ஆட்சி செலுத்திவந்தேன்! புடவைக் கடையிலும் போயிருப்பேன் புரோகிதர் நாவிலும் தானிருப்பேன் கடன்காரர் வீட்டிலே என்றென்றுமே கவிபாடிக் கொண்டுநான் வீற்றிருப்பேன்!