பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 தாச்சியம்பல் சிறு கதைகள் பொய்வேண்டாம் பொய்வேண்டாம் என்று சான்ருேt புகன்றதெலாம் அது விளக்கும் தீமை நோக்கி நெய்கின்ற தீமையெவாம் நீங்கி விட்டால் நிகழ்காலம் பொற்காலம் ஆகி நிற்கும்! வைகின்ற மனம்போனல் அன்பு கூடும்: வாழ்வினிலே முன்னேற்றம் உண்மை யாகும்? செய்கின்ற செயலெல்லாம் உயர்ந்த தாளுல் தேனருவி பாய்ந்தோடும் வைய மெங்கும்! இருப்பது பொய்; போவதுமெய் என்று சில்லோர் இவ்வுலகை வெறுக்கின்ற கருத்து ரைப்பார் கருப்பத்தை நிறுத்திவிட்டால் உலக மில்லை; காண்கின்ற தத்துவங்கள் எதுவு மில்லை. விருப்பத்தை நிறைவேற்ற ஆற்ற லற்ருேர் வெறுப்புற்றுச் சொல்லுகின்ற வேதாந் தத்தால் உருப்பெற்ற பொருளெல்லாம் பொய்யாய்க் கொண்டால் உலகத்து மண்துகளே மிஞ்சிக் காணும்! பொய்யென்று கற்பனையைப் பழித்துச் சொன்னல் பொருளற்றுப் போய்விடுமே உண்மைக் கிங்கே செய்கின்ற அழகன்ருே? சான்ருேர் கொள்கை சிறப்படையக் குழைக்கின்ற வண்ண மன்ருே? தெய்வத்தைக் கண்குளிரக் காட்டு கின்ற திருவன்ருே? கற்ருேர்தம் நெஞ்ச ரங்கில் பெய்கின்ற மழைநீரில் உரமும் சேர்த்துப் பெறுகின்ற விளைவன்ருே? இன்பக் காட்சி!