பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 267 நேஞ்சத்துக் கற்பனையைக் கல்லில் தேக்கி நிறுத்துபவன் சிற்பி, அதை ஒவிய ன்தான் கொஞ்சுகின்ற திரைப்படமாய் வண்ணங் கூட்டிக் கொடுத்திடுவான். பாவலளுே காவி யத்தில் விஞ்சுகின்ற சொற்களிலே படைத்த ளிப்பான் வியப்படையக் கற்றவர்கள் துய்க்கும் பட்டுக் குஞ்சத்தை எளியவனும் தொட்டுக் கொஞ்சக் கொடுத்திடுவான் கதைபடைக்கும் எழுத்து வேந்தன்! அடுத்தடுத்து வாழ்க்கையிலே தொடரும் சிக்கல் அத்தனையும் வகைப்படுத்திப் பிரித்தெடுத்துத் தொகுத்துரைக்கும் ஆற்றலினல் உண்மை வெல்லச் சொல்லுகின்ற பாங்கிருக்கும் பெருங்க தையில்! விடுத்ததொரு கவண்கல்லில் மோதிக் கீழே விழுகின்ற கணிச்சுவையைத் துய்த்தல் போலே எடுத்ததொரு கற்பனையின் திறத்தி ளுலே இசைப்பதுதான் சிறுகதையின் ஆற்றலாகும்! மின்னுகின்ற நொடிப்பொழுதில் முடிந்த போதும் மீளாது நெஞ்சத்தில் தேங்கு கின்ற சன்னமெனும் உணர்வுதனைக் கற்ப னைக்குச் சதிராடும் சொற்களினல் சேர்த்துக் கூட்டி உன்னதமாம் உருவகத்தைப் படைத்துக் காட்டி ஒப்பரிய சித்திரமாய்ச் செய்தி றத்தால் சின்னதொரு வடிவத்தில் எழுத்து வல்லார் சேர்த்தளிக்கும் சிறுகதைகள் சுவையின் கோவை! நீர்க்குவளை நீட்டியவள் கையைப் பற்றி நின்றவனின் செய்கைக்குப் பயந்து கூவி ஆர்ப்பவளைத் தேடிவந்த அன்னை பின்பால் அம்மாநீர் விக்கியதிக் காணக் கென்றே