பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 நாச்சியப்பன் வேர்த்தவுடல் காயுமுனம் தன்னைக் காக்க விழைந்தவளின் போக்கெண்ணி நகைத்தான் கள்வன் கோக்கின்ற உள்ளத்துக் காதல் கூறும் குறுங்கதைகள் கலித்தொகையில் கொள்கள! கொள்ளை! புறமுதுகு காட்டினனே மைந்த னென்று போர்க்களத்துப் பிணம்புரட்டிப் பார்த்த போது திறன்மிகுந்த விறல்மைந்தன் மார்பில் அம்பு செருகியுள்ள உண்மைதனைத் தெரிந்து கொண்ட மறமகளின் நெஞ்சத்தில் பொங்கு கின்ற மகிழ்ச்சிதனைப் புறப்பாட்டில் வடித்தி ருக்கும் அறங்கூறும் சிறுகதைகள் சங்க நூலுள் ஆயிரமாம் ஆயிரமாம் காண லாமே! சிறுகதைகள் அறுபத்து மூன்றின் கோவை சேக்கிழார் அருள்பெரிய புராண மாச்சாம்! குதுகுறுக்கும் குழந்தைகட்கு வள்ளி யப்பா கொடுத்ததெலாம் சிறுவர்சிறு கதைக ளாச்சாம்! மறுமலர்ச்சிக் காலத்தில் புதுமைப் பித்தன் வரைந்ததெலாம் சிறுகதையின் பெருமை யாச்சாம்: விறுவிறுப்புச் செந்தமிழில் அறிஞர் அண்ணு விரல்படைத்த சிறுகதைகள் வெல்லப் பாகாம்! அயராமல் தொடர்ந்தெழுதும் கலைஞர் பூவை ஆறுமுகம் அநுத்தமா கமலா லட்சுமி வியன்திறமை மிகு பி. எஸ். இராமையா நல் விளையாட்டுத் தமிழ்எழுதும் அழகர் சாமி ஜெயகாந்தன் ரகுநாதன் வல்லிக் கண்ணன் தில்லைவில்லா ளன் டி. கே. சீனிவாசன் பயன்கவிதைக் கதையெழுதும் நாச்சியப்பன் பல்சுவைசேர் சிறுகதையை வளர்க்க லானுேம்!