பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நாச்சியப்பன் எனக் கவிஞர் அடிமையின் மோகமாகக் காட்டுவது பழக்கத் திற்கடிமையான மக்களைச் சிந்திக்கச் செய்யும் நிலையின தாகும். வட்ட நிலா என்ற கவிதையில் நிறைமதியை உருட்டி வைத்த வெண்ணெயோடும் வெள்ளையப்பத் தோடும் ஒப்பிட்டுக் காட்டி இருப்பது கருத்துப் புலத்தைக் காட்சிப் புலமாகக் காண்பதற்கு வழி வகுக்கின்றன. நாட்டு வழக்கில் காதலுக்குக் கண்ணில்லை என்பர். கவிஞர் காதலுக்கு வித்தே கண்கள்தான் எனப் பல்லிடங் களில் (பக் 115, 117, 138, 161, 211) காட்டியிருப்பது புதுமை இலக்கணம் வகுப்பதற்குச் சான்ருகின்றது. காதற் பார்வை கருணைப் பார்வையாக மாறுதற்குத் திருமணம் எவ்வாறு ஒரு கருவியாகப் பயன்படுகிறது என்பதனை, ‘வெட்டுவிழி யம்பாலே வீழத்துகின்ற கொடியவளைக் கொட்டுமருட் பார்வையினைக் கொண்டவளாய் மாற்றுகின்ற கட்டழகும் சொற்சுவையும் காதலெனும் ஒருணர்வால் ஒட்டுறவும் கொண்டவர்கள்" என விவரித்துச் செல்லக் காண்கிருேம். சொல் வேறு செயல் வேறு என நடித்துத் திரியும் உயர்ந்தோரின் உலக நடைமுறையினை, “காவியத்து நாயகரின் மேன்மை பற்றிக் கழகத்துக் கூட்டத்துப் பத்திரிக்கை ஒவியத்தும் காண்பதன்றித் தலைவர் என்போர் உள்ளத்தில் நடைமுறையில் காணற்கில்லை” என வெளிப்படுத்திப் புரட்சி செய்கின்ருர் திருமணத்திற்கு விளக்கமாக,