பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 269 சமுதாய இருள்கிழியக் கதிர் விரிந்தால் தலைநிமிர்ந்து வாழ்ந்திடலாம்; இருட்ட றையின் கமுக்கத்தை வெளிப்படுத்தல் விகட மாமா? கண்கூசும் மனங்கூசும் பழியும் சேரும்! குமுதமலர் விரித்தழகு கொடுக்க லாகும் குமட்டுகின்ற புகைநச்சைப் பரப்ப லாமா? அமுதான கதைபடைக்க மறுத்து நாட்டில் அவமானம் வளர்ப்பவரைத் தடுத்தல் வேண்டும்! ஆடைகுறைக் கின்றகதை வேண்டாம்; நல்ல அறிவு வளர்க் கின்றகதை படைத்தல் வேண்டும்! வாடை,மதுக் குடிக்கதைகள் வேண்டாம்; தூய்மை வளர்க்கின்ற சிறுகதைகள் வரைதல் வேண்டும்! பீடைமதஞ் சாதிகதை வேண்டாம்; அன்பு பெருக்குகின்ற திருக்கதைகள் மிகுதல் வேண்டும் மேடையிலே வீசுகின்ற பூங்காற் றைப்போல் மிகவினிய சிறுகதைகள் படைப்போம் வாரீர்!