பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

აშგ நாச்சியப்பன் நூல் வெளியீடு கொல்லர்களின் வீதியிலே ஊசி விற்கக் கூவுகின்ற பான்மையெனக் காப்பி யத்தில் வல்ல தமிழ்ப் புலவர்களின் அவையிற் சென்று வாதமிடும் பேதையென நூற்ப திப்பில் வல்லவர்கள் கூட்டத்தில் வெளியீட் டிற்கு வகைகூறும் நகைமொழியைப் பாட வந்தேன் தில்லைநா யகங் கொடுத்த தெம்பல் லாமல் திறன்வேறில் லாதவெனைப் பொறுத்துக் கொள்வீர்! தழைக்காட்டு மரமெனினும் பூத்த போது தனிக்கவர்ச்சி கொண்டிருக்கும்; வண்டு கூடும்! மழைமேகக் கருப்பெனினும் முகக்க ளையால் மணச்சந்தை மதிப்பிற்பெண் உயர்ந்து நிற்பாள் தழலாக இருந்தாலும் சுடர் விளக்கில் தனங்கூட்டும் திருமகளாய்ப் பொலிவு காட்டும்: அழகாக வெளியிடுக நூலே யாரும் ஆவலுடன் வாங்குதற்குத் துணையா கும்மே! அறவாணர் வரலாற்றை வரைக. கெட்ட ஆசைகளைப் பேசுகின்ற கதைகள் வேண்டாம்! மறவீரர் திறன்வரைக! திரைப்ப டத்து மங்கையரின் வரலாறு பரப்ப வேண்டாம்! அறிவாளர் ஆய்வுகளை விளக்கம் செய்க! . அந்தரங்க மருமங்கள் வேண்டாம்! நல்ல தரமாக வெளியிடுக நூலைப் பண்பு தழைத்தோங்கி மக்களினம் சிறப்ப தற்கே!