பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 労賞 களையின்றிச் செய்திடுக வயலை! அங்கே கண்டிடலாம் நல்விளைச்சல் எழுதும் கைக்குத் தனையின்றிச் செய்திடுக; கருத்து வெள்ளம் தடையின்றிப் பாய்ந்தறிவு வளத்தைக் கூட்டும்! விழைவின்றிச் செயல்புரிதல் வேண்டாம்! நாட்டு வேட்கையுடன் எப்பணியும் செய்க என்றும் பிழையின்றி வெளியிடுக நூலை! நல்ல பெயரோடு பயன்மிகவே பெறலா கும்மே! பொலிவாக மோதிரங்கள், வயிரத் தோடு போடுவது சிலருக்கே வாய்ப்ப தாகும்! வலிவான கோட்டையென வீடு கட்டி வாழ்ந்திடவே எல்லோரும் நினைக்கொ னது! சலியாமல் போராடும் வாழ்வில் மக்கள் தலையாய அறிவுபெறச் செய்தல் வேண்டும் மலிவாக வெளியிடுக நூலை, ஏழை மகன்கூட வாங்குதற்கிங் கெளிதா கும்மே! நலமான வாழ்க்கைக்கு மருத்து தாலும் நாட்டுவளம் கூட்டுவர லாந்று நூலும் நிலநூலும் உயிர்நூலும் வேதி நாலும் நீதிநெறி நன்னூலும் சட்ட நாலும் வலமிடுகோள் அறிநூலும் வான தாலும் வாழ்வுயர்த்தும் பயிர்நூலும் பாட்டு நாலும் பலவாக வெளியிடுக நூலே எந்தப் பாங்கினரும் வாங்கிமிகப் படிக்க லாமே! வணங்குகின்ற பண்பிருக்க வேண்டும் தீமை வரும்போதில் இரும்பாகும் ஆற்றல் வேண்டும் குணங்குடிகொண் டிருக்கின்ற நெஞ்சம் வேண்டும் குறையாத தன்மான உணர்ச்சி வேண்டும்