பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 273 ப தி ப் பா ள ர் வானத்து மதிதோன்றின் இருட்டு நீங்கும் மாந்தர்க்கு மதிவந்தால் திருந்தும் வாழ்வு தேனெத்த மங்கைமுக மதியைக் கண்டால் தேடிவந்த காதலற்குக் களிப்புத் தோன்றும்! கூனெத்த நெஞ்சுடையார் கொடுமைக் கஞ்சிக் குனிந்திருக்கும் வாழ்வுடையார் நிமிர்ந்து நிற்க ஏனத்து மருந்தெனவே மதிவல் லார்தம் ஏடுகளைப் பதிப்பாளர் நாட்டுக் கீவார்! அமுதாக ஏருழவர் படைத்த வெல்லாம் அங்காடிப் படியேற வில்லை யென்ருல் கமகமெனச் சமையலறை மணத்தல் உண்டா? களிப்பாக்கு வெற்றிலையின் சுவையு முண்டா? சமுதாயச் சந்தையிலே வணிகர் இன்றேல் தறிப்போட்ட துணியெல்லாம் விலைக்குப் போமா? அமைதிமிகும் அறிஞர்படைத் தளித்த வெல்லாம் அச்சேற்றப் பதிப்பாளர் இன்றேல் என்னும்? கம்பனையும் மில்ட்டனையும் ஒப்பு நோக்கிக் காந்தியையும் லிங்கனையும் சேர்த்துக் கூட்டித் தும்பியென நூல்தோறும் சுவையு றிஞ்சித் துய்க்கின்ற வாசகரின் இன்ப மெல்லாம் தம்பெரிய சாதனையால் அச்சில் ஏற்றித் தருகின்ற பதிப்பாளர் செயலே யன்ருே? கொம்புத்தேன் கைக்குவரத் துணையாய் நிற்கும் குறித்தொண்டர் அறிவொளியைக் கொணரும் தூதர் மூலிகையின் பெரும்பயனைக் கண்ட முன்னேர் மூடிவைத்தார்; இந்நாளிற் பயணி ழந்தோம் தோலுரிக்கும் பாம்பெனவே நஞ்சு கக்கித் துண்டாடும் சாதிவெறி கொண்ட தாலே நா-18