பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274. நாச்சியப்பன் வேலிவைத்துச் சதிகாரர் ஒருசா ரார்க்கே வித்தையினைப் பயிற்றுவித்த வஞ்சம் கண்டோம்! நூலனைத்தும் பதிப்பவரோ நுகர்வோர்க் கெல்லாம் நூற்றுக்கு நூறு தரும் தூய தொண்டர்! சமுதாயம் காக்கின்ற நூல்கள் தம்மைத் தருகின்ற பேரறிஞர் மேலோர் ஆவார். அமுதாகப் படைக்கின்ற அறிஞர் நூலை அளிக்கின்ற பதிப்பாளர் நல்லோர் ஆவார் நமநமக்கும் உணர்ச்சிக்குத் தீனி கூட்டி நல்குகின்ற புல்லறிவு நூல்ப டைப்போர் குமுகுமென வளர்கின்ற சமுதா யத்தைக் கொடுநஞ்சால் அழிக்கின்ற மாக்கள் ஆவார்! வள்ளுவனைக் காப்பியனைக் கற்ற வர்கள் வைத்திருந்தார் தம்நெஞ்சப் பெட்டிக் குள்ளே! கொள்ளைகொள்ளை யாயிருந்த அறிவுச் செல்வம் குறைப்பட்டுச் சிறைப்பட்டு நின்ற தம்மா! அள்ளிவந்து வெள்ளமென உலகுக் கெல்லாம் அச்சேற்றிப் பதிப்பித்துத் தந்தார் தம்மை உள்ளுதொறும் உள்ளுதொறும் நன்றி யாலே உவகைவந்து நெஞ்சகத்தில் பொங்கு தம்மா! ஆறுமுக நாவலராம் அறிஞர் சைவ ஆகமங்கள் புராணங்கள் திருமுறைகள் கூறுகூ ருய்க்கிடந்த வற்றைச் சேர்த்துக் கூட்டிஒழுங் காக்கிஉயர் பதிப்பாய்த் தந்தே ஏறிவந்த பரங்கியரின் சமயந் தன்னை எதிர்த்துநின்று சைவத்தைக் காத்தார்; சற்றும் ஊறின்றிப் பிழையின்றித் தமிழைக் காத்தார்; உத்தமரின் தொண் டெண்ண உள்ளந் துள்ளும்!