பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடம்கள் 275 நேற்றிருந்த காப்பியங்கள் இன்றைக் கில்லை நீரோடு போயினவோ தீயில் வெந்து காற்ருேடு சாம்பலெனக் கலந்து போச்சோ! கவிஞர்படைப் பத்தனையும் வீணுய்ப் போச்சே! கூற்றுவர்போல் பிறசமயம் சார்ந்தோர் தம்மைக் கொலைசெய்த பாதகர்கள் அன்னர் செய்த ஏற்றமிகு நூல்களையும் அழித்து விட்டார்! எழில்மிகுந்த தமிழ்த்தாயின் அணி பறித்தார்! சேமித்து முன்னேர்கள் வைத்த கல்விச் செல்வத்தைக் காப்பியங்கள் தம்மை யெல்லாம் ஒமத்தில் எரித்தவர்கள்; ஒடும் ஆற்றில் உடன்போக விட்டவர்கள் தம்மைக் கெஞ்சி மீதத்தை மீட்டுவந்து பதிப்பித் திந்த மேதினிக்குத் தமிழ்த்தொண்டு செய்த நல்லார் சாமிநா தப்பெரியார் தம்மை எங்கள் தமிழ்த்தாத்தா என்றழைத்துப் பெருமை கொள்வோம்! பழந்தமிழ்நூல் ஏற்றமுறப் பதிப்பிப் போரும் பழந்தமிழர் அடியொற்றிப் புதுமை சேர்த்தே அழகொழுகப் புதுப்படைப்பை ஆக்கு வோரின் அரியநூல் பலவற்றைப் பதிப்பிப் போரும் இழந்ததமிழ்ப் பெருமைதனை மீட்போ ரென்டேன் எழில்மிகுந்த தமிழ்த்தாயின் தொண்ட ரென்பேன் குழந்தைகளும் இளைஞர்களும் வளர்ந்தோர் தாமும் குறையில்லா அறிவுபெறச் செய்வோ ரென்பேன்! வளர்ந்துவரும் விஞ்ஞான முன்னேற் றத்தை வடிவாக்கித் தருகின்ற நூல்கள் கண்டேன் கிளர்ந்துவரும் தொழிலாளர் முன்னேற் றத்தைக் கேடகற்றித் தருகின்ற நூல்கள் கண்டேன்