பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 நாச்சியப்பன் தளர்ந்துவரும் போதெல்லாம் உணர்வு கூட்டித் தருகின்ற நெறிநூல்கள் பலவுங் கண்டேன் உளந்தளரா திவற்றையெலாம் பதிப்பிப் போர்கள் உயர்ந்ததமிழ்த் தொண்டரெனப் போற்றுகின்றேன்! பயிர்விளையும் அதனிடையே களையும் தோன்றும் பயன்விளையும் அதனுடனே துயரும் தோன்றும் உயர்தமிழ்நூல் பலவற்றின் ஊடே தீய உடல்வெறிநூல் சிலதோன்றும்; அவற்றை யெல்லாம் தயவுடனே கேட்கின்றேன்; பதிப்பா ளர்தம் தரங்கெடுக்கும் அழுக்கெனவே ஒதுக்க வேண்டும் பயனுடைய நூலன்றி வேறு நூல்கள் பரவாமல் தடுத்தல்பெரும் தொண்டா கும்மே! மேற்படிக்கு முன்னேற்றல் அறமாம்; அந்த மேற்படிக்கு ஊறுவரின் தடுத்தல் நன்ரும்! காற்படியை முழுப்படியாய் நிறைத்தல் நன்ரும் கலக்கவரும் துளிநஞ்சும் விலக்கல் நன்ரும்! பாற்பசுவைக் காப்பதுபேர் அறமாம்; நச்சுப் பாம்புகளைக் கொல்லலுமோர் அறமே யாகும்! நூற்படியே நடப்பதுநல் அறமாம், கெட்ட நூல்பரவா வணந்தடுப்ப தறமே யாகும்: அடிக்கின்ற தென்றலினல் உடலுக் கின்பம்! அலைமோதி எழுங்கடலோ கண்ணுக் கின்பம்! துடிக்கின்ற பூங்கொடியின் அசைவு தோறும் தோன்றுகின்ற எழிலுக்கோ இணையே யில்லை. படிக்கின்ற போதெல்லாம் இன்பம் இன்பம்! படித்தவர்கள் சுவைவிளக்கும் போதும் இன்பம்: முடிக்கின்ற இன்பமில்லை இந்த இன்பம் முடிவின்றித் தொடர்கின்ற இன்ப மாகும்!