பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 277 வெற்றித்தாய் சிரித்தாள் இங்கே கீழ்நாட்டார் என்ப தாலே கீழ்ப்பட்டார் எனநி இனத்துப் பாழ்நாட்டங் கொண்ட மேற்குப் பாக்கிஸ்தான் ஆள வந்தார் வாழ்நாட்டங் கொண்டெ ழுந்த வங்கத்தை நசுக்கி வந்தார்; சூழ்வாட்டம் போக்க மக்கள் சுழற்காற்றுப் போல்எ ழுந்தார்! ஆதிக்க வெறிக்கும் எல்லே அளவுண்டே மக்கள் தம்மைப் பாதிக்கும் ஆட்சி தன்னைப் . பலநாட்கள் பொறுப்ப துண்டோ? சாதிக்கும் பொய்யும், ஒற்றைச் சமயத்தார் என்னும் கூற்றும் வாதிக்கும் உயிரை என்ருல் மறுப்பின்றி ஏற்ப துண்டோ? எண்ணத்தால் தொலையர்; நாட்டின் எல்லைக்கும் தொலையர்: பேசும் வண்ணத்தாய் மொழிக்கும் அந்த வன்னெஞ்சர் தொலையர்: ரத்தம் உண்ணத்தான் அலைந்தி ருக்கும் ஒநாயைப் போன்ருேர் வங்க மண்ணைத்தாம் விட்டொ ழிந்தால் வாழ்வுண்டென் றுணர்ந்தார் மக்கள்.