பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நாச்சியப்பன் வங்கத்தின் எண்ணம் முஜ்புர் ரகுமானப் வடிவெ டுத்துத் தங்கத்தாய் நாட்டை மீட்கத் தகுஞ்சேனை யாய்வ ளர்ந்து சிங்கத்தைப் போலெ ழுந்து சீற்றத்தைக் காட்டி, மேலைப் பங்கத்தான் யாயா கானின் படைமேலே பாய்ந்த தம்மா! ஊரெல்லாந் திரண்டெ முந்தே உரிமைக்குக் குரலெ ழுப்பப் பாரெல்லாம் பார்த்தி ருக்கப் படைகளே யனுப்பி வாழ்வின் வேரெல்லாம் இற்று வீழ வெடிகுண்டைப் போட்டு தற்ருய் மாரெல்லாங் கற்ப ழித்து மாபாவி கொடுமை செய்தான். படையாட்சி கொண்ட மேற்குப் பாக்கிஸ்தான் வெறியொ ழிக்கத் தடையாக எழுந்த் வங்கத் . தலையெல்லாம் சாய்த்து நாட்டின் கடையாணி போலி ருந்த கற்ருரைச் சுட்டுக் கொன்று தொடைதட்டி மேலும் மேலும் துள்ளாட்டம் போட்டி ருந்தான். உரிமைக்குக் கிளர்ந்தே ழுந்த ஊராரைக் கொன்ருெ ழித்தல் சரிதான என்று கேட்கத் தக்கோர்கள் உலகத் தில்லை;