பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தாச்சியப்பன் கீழ்வங்க மக்கள் செய்த கிளர்ச்சிக்குத் தோள் கொடுத்து வாளேற்கச் சூளு ரைத்து வரமீந்தாள் இந்தி யத்தாய்! பாழாக்க வந்த மேற்குப் படைக்கொடியர் அட்ட காசக் கீழாண்மைச் செயல்த டுக்கக் கிளர்ந்தெழுந்தார் வீர ரெல்லாம்! வம்புக்குப் போவ தில்லை வந்தாலோ விடுவ தில்லை தெம்புக்குக் குறைவில் லைனம் தேயத்திற் கோழை யில்லை கும்பிட்ட கையைப் போற்றில் குறுக்கிட்ட கைமு றித்துச் செம்பாலச் சிந்தும் வீரச் சிங்கத்தின் கூட்டம் தாங்கள்! ஐந்தாண்டின் முன்னே உங்கள் அய்யூப்கான் வெள்ளோட் டத்தில் செந்தேளாய்க் கொட்டிக் கொட்டித் தீர்த்தோமே மறந்து போச்சோ? வந்தீரே புத்தி கெட்டும் வான்படையும் கடற்ப டையும் வெந்தேதான் போயிற் றேஎம் வீரத்தைக் கண்டீரன்ருே? வெறியாட்டம் தவிர்க்கச் செய்த விளையாட்டுப் போரி லேசெம் மறியாட்டைப் போல்வி ழுந்து மடிந்தீரே சரன டைந்தீர்!