பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 281 பறியுற்ற பின்னே அங்கே பலவாறு பேசி நிற்றல் அறிவாமோ? உலகம் உங்கள் அழிவைத்தான் கண்ட தின்றே! வெற்றித்தாய் சிரித்தாள் இங்கே வெற்ருரக் கூச்சல் அங்கே! முற்றத்தான் தோற்ரு லன்றி முடிக்கீரோ வெறிப்போ ராட்டம்? கற்றுத்தான் கொடுக்க லாகும் கண்மூடிக் கொண்டே பாம்புப் புற்றுக்குள் கையை விட்டால் பொறுத்துக்கொண் டாயி ருக்கும்? பேருந்தைக் கொளுத்துவார் வல்லமையைக் காட்டுதற்கு மக்கள் மன்றில் வந்து நின்ருல் தெளிவாகும்; அத்தை விட்டு தல்லவர்தம் வரிப்பணத்தில் ஒடு கின்ற நாட்டுடைமைப் பேருந்தைக் கொளுத்தி விட்டுக் கல்லெறிந்து வழிமறித்துக் கூச்ச விட்டுக் காட்டுநரி போலிங்கே நடந்து கொள்ளும் புல்லர்களைக் கண்டிங்கே இளைத்து விட்டால் புதுவாழ்வு காண்பதுதான் முயற்கொம் பாகும்!