பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 283 அளக்கலரும் பொன்னகைகள் நாட்டைக் காக்க அளிப்பதற்குத் தயக்கமுற மாட்டா ரன்ருே! களக்கமுறச் சட்டத்தால் எங்கும் தங்கக் கட்டுப்பா டெதற்கியற்ற வேண்டும் சொல்வீர்?" 'தாய்நாட்டின் மீதன்பு கொண்டி ருக்கும் தாய்மார்கள் தங்கள் நகை தங்கள் அன்புச் சேய்களுக்குச் செய்துவைத்த தெல்லாம் கொண்டு திருநாட்டைக் காப்பதற்குச் சேர்த்து விட்டார்! பேய்போலப் பணங்காக்கும் கொள்ளை லாபப் பெரியவர்கள் தங்கத்தைப் பதுக்கி விட்டார்! வாய்மையிலார் அவர்செய்யும் தீமை நீக்க வந்ததுதான் கட்டுப்பா டறிக பெண்ணே.' 'கட்டுப்பா டெண்வொன்று வந்த தாலே கட்டுகின்ற தாலிக்கும் கேடா யிற்றே: சுட்டபசும் பொன்னலே செய்யும் தாலி தொங்கியதங் கக்கழுத்தில் மட்டத் தங்கம் கட்டுவதோ புனிதமெனக் கனன்று கேட்கும் கனவான்கள் கேள்விக்கிங் கென்ன சொல்வீர்? சட்டத்தை மதிப்பாரோ தாலி தெய்வம் தானென்று மதிக்கின்ற பெண்கள் அத்தான்!" 'காதலினல் இரண்டுள்ளம் சேர்ந்த பின்னே - கட்டுவதேன் தாலியெனக் கேட்டோ ரெல்லாம், பேதையராய்ப் பெண்களையே வைத்தி ருக்கப் பெரியவர்கள் முன்னாளில் செய்து வைத்த குதறிக! தாலியென்ப தடிமைச் சின்னம்! தொன்று தொட்ட மடமையிது! சீர்திருத்தப் பாதைக்கொவ் வாததெனச் சொன்னே ரெல்லாம் பாடுகின்ருர் புனிதப்பாட் டின்று காணுய்!