பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தாச்சியப்பன் 'தங்கணவர் மேலன்பு கொண்ட பெண்கள் தாலியினைப் புனிதமென நினைப்ப துண்டு. தங்கத்தால் ஆயிடினும், மஞ்ச ரிட்ட - தனிக்கயிற்றில்ை ஆயிடினும், தன்னைக் காக்கும் சிங்கமென வந்திணைந்த கணவன் தொட்டுச் சேர்த்திறுக்கிக் கட்டியதற் ருலி தன்னை எங்குமுள தெய்வத்தின் மேலா துெண்ணி இருப்பவரே கற்புடைய பெண்கள் ஆவார். 'தாலிகட்டும் வழக்கத்தை மடமை என்று தள்ளிவைத்த புதுமகளிர் தம்உ யிர்க்கு மேலவராய்த் தம்கணவர் தம்மை எண்ணி மேம்படுத்தி தடத்துதலும் கற்பே யாகும்! வாலிபர்கள் அந்நாளில் புலியை மாய்த்து வன்பல்லைப் பிடுங்கிவந்து வீரங் காட்டித் தாலியெனக் காதலியர் மனமு வக்கச் சந்தனத்துச் சிறுகழுத்தில் கட்டி விட்டார். "புலியடிக்கும் காலமெல்லாம் மறைந்த பின்னே பொற்ருலி கட்டுகின்ற வழக்கம் கண்டோம். எலியடிக்கும் பூனையையும் அடித்துத் தின்னும் இழிசெயலான் சீனத்தான் போர்தொ டுத்து மலையடுத்த திருநாட்டில் காலே வைத்தான்: மனங்குமுறி இளைஞரெல்லாம் இமயந் தாண்டித் தலையெடுத்த சீனத்தான் பல்லு டைத்துத் தாலியெனப் பெண்களுக்குத் தருதல் வீரம்! 'வீரத்தை மானத்தைத் தாய கந்தான் வேண்டுகின்ற காலமிது; வெங்கா யத்தின் காரத்தைச் சொற்களிலே ஏற்றி வீனே கலகத்தைக் கிளப்புகின்ற குர ரெல்லாம்