பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நாச்சியப்பன் கதை பேசம்மா, கதை பேசு! பெண்ணே! பெண்ணே! கதை பேசு! பிறந்த வீட்டுக் கதை வேண்டாம்! கண்ணே! கண்ணே! வாழ்வி னிலே களிப்பு நல்கும் கதை பேசு! அன்பே அன்பே கதை பேக! அடுத்த வீட்டுக் கதை வேண்டாம்! இன்பம் நல்கும் பெரு வாழ்வை எடுத்துச் சொல்லும் கதை பேசு! திரைப்படத்துக் கதையெல்லாம் சிறுமை சேர்க்கும் அவை வேண்டாம்! பிறையைப் போலே விழாக் கூட்டும் பெரியோர் வாழ்வுக் கதை பேசு! வேளைக் கொன்ருய் வேடத்தை விரும்பி மாற்றும் மாதர் கதை ஆளே மாற்றும்; மன மாற்றும்; அறிவை மாற்றும்; அவை வேண்டாம்! நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், நல்கும் பாலைச் சுரந் தூட்டும் வீட்டுத் தாயின் கதை பேசு: வீரத் தாயின் கதை பேசு: அன்பு, பண்பு, வீரம், உயர் அறிவு நல்கும் கதை பேசு இன்பம் இவைதாம்; பிறவெல் லாம் இன்னல் சேர்க்கும் அவை வேண்டாம்!