பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கம் 28% புகழ்தேடி ஓடாதீர்! என்னைப்போல் யாருண்டு நாட்டி லென்றே எல்லோரும் அறிவதற்குச் சொல்ல வேண்டாம். தன்னைப்போல் எல்லோரும் தெரிந்து கொள்ளத் தக்கசெயல் செய்துவிட்டால் புகழே தங்கும்! புகழ்பெறவே வேண்டுமென ஒடி ஒடிப் பொருளில்லார் போற்பலரை அண்டி நின்று நகைசெய்து நில்லாதீர்! நற்செ யல்கள் நாடோறும் செய்துவந்தால் புகழே நண்ணும்! செல்வாக்குப் பெற்றவரைத் தேடிச் சென்று சேர்ந்திருந்து புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் நல்லவாக்கும் அருஞ்செயலும் தொண்டு நெஞ்சும் நற்புகழைச் சேர்த்துவிடும் ஐயமில்லை மற்றவரைத் துாற்றுவதால் குற்றம் சொன்னல் மக்களெல்லாம் போற்றிடுவார் நம்மை யென்று சற்றேனும் நினைக்காதீர்! ஆக்க வேலை சாதித்தால் புகழ்தானே வந்து சேரும். அரும்பசியைக் களைவதற்கும் மற்ற வர்க்கோள் ஆபத்தைத் தவிர்ப்பதற்கும் முயலு வோர்க்கே பெரும்புகழே நிலைத்திடநாம் கண்ட துண்டு பிறிதெல்லாம் வெறும்புகழே! நீர் எ ழுத்தே! எதிர்நின்று புகழ்வானை நம்பி நம்பி ஏமாற வேண்டாமே இகழ்வான் பின்னே! புதர்நின்று மறைத்தாலும் முரசின் சத்தம் புவியறியும் தன்னடக்கம் புகழைச் சேர்க்கும்!