பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 நாமக்யப்பல் பாடல்கள் நான் எழுதப்போகும் கவிதை காலைக் கதிரின் கவர்ச்சியும் கடலின் அலையின் கிளர்ச்சியும் மாலை மதியின் தோற்றமும் மலையின் முடியின் ஏற்றமும் கோலைக் கொண்டிங் கெழுதியே குவித்து விட்டார் கவிஞரே வேல்ை யின்றி மீண்டும்.நான் விளம்ப் லாமோ இவற்றையே: இன்பம் கமழும் தமிழிலே இளம்ப்ெண் அழகைப் பாடிஞர் அன்பு நிறைந்த நெஞ்சிலே அரும்பும் காதல் பாடினர் பொன் பண்டத்த இன்பமும் புரியக் கவிதை பாடினர் என்படைப்பாய் மீண்டும் நான் இவற்றைப் பாட லாகுமோ? உழவர் பெருமை பாடினர் உழைப்போர் உரிமை பாடினர் கிழவர் இளைஞ ராகியே கிளர்ந் தெழுந்த வீரமும் அழகு மடவார் வாளெடுத் தரசு புரிந்த காதையும் எழுதி விட்டார் நானுமே இவற்றை மீண்டும் எழுதவோ? அத்த னைக்கும் மேலதாய் அறிஞர் போற்றும் நூலதாய்ப் புத்தம் புதிய பாடலாய்ப் பொருளும் சுவையும் கூடவே மெத்த மெத்த முயன்று நான் விரும்பிப் பன்டக்கப் போகிறேன் இத்த ரைக்கோர் புதுமையாய் இருக்கும் அந்தக் கவிதையே!