பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுரை இரா. பாலசுப்பிரமணியம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அடையா று , சென்னை-20 பொதுவாகக் கவிதையினை இருவகைப்படுத்தலாம். ஒன்று மிகைக்கவிதை, மற்றென்று இயல்புக்கவிதை என்ப தாகும். முன்னது இவ்வுலகத்தில் இல்லாததை, நடக்காததை, நடக்க முடியாததை நடப்பதாகக் காட்டி புதியதோர் உலகத்தினை உருவகித்துக் காட்டும். கற்பனைக் குதிரையின் வேகத்திற்கு இங்குக் கட்டுப்பாடு ஏதுமில்லை. ஆனல் இவ்வுலகச் சமுதாயத்திற்கு இத்தகு கவிதை எத்தகு பலனை அளிக்கும் என்பது கேள்விக் குறிதான்... பின்னது, இவ்வுலகத்தைப் பாடுவது; இருப்பதைப்பாடு வது. எப்படி இருந்தால் இவ்வுலக வாழ்க்கையில் சிறக்கலாம் என்பதைப்பற்றிப் பாடுவது; அஃதாவது இவ்வகையை வாழ்க்கையின் விமர்சனம் என்று கூடச் சொல்லலாம். திரு. நாச்சியப்பன் அவர்கள் கவிதையை நுகர்ந்த Guirgi' on 3& Lonj (Totality of impression) @g owl traig 貌scm)、恋リ)#A வலியுறுத்துவதாக அமைவதைக் காணமுடிகிறது. எனவே, பொன்னலாகிய கதவுகளைத் திறந்து சொர்க்க புரிக்கு அழைத்துச் செல்கிருர் என்பதைவிட, மரக்கதவு களைத் திறந்து உண்மையுலகிற்கு (Realism of life) அழைத்துச் செல்கிருர் என்று கூறினல் மிகையாகாது.