பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 கவிதையைப்பற்றிய அணுகுமுறை (approach) இரண்டு விதங்களில் அமையலாம். ஒன்று கவிஞர்தம் கவிதைவழி சமுதாயத்தை உணருதல்; இரண்டு கவிஞரின் வாழ்க்கை வரலாற்று வழி அவர்தம் கவிதையை உணருதல்; இவற்றில் பிந்தையது எல்லோராலும் இயலாது. ஏனெனில், ஆத்தகு அணுகுமுறையை அனுகுபவர் கவிஞரின் சமகாலத்தவராக இருப்பதோடு நெருங்கிய நண்பராகவும் கவிஞரைப் பற்றிப் புரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வகையில் இவ்வாய்வுரை முதல்நிலை அணுகுமுறையில் அமைகிறது என்பதைக் கூறிக்கொள்ள விழைகிறேன். குறிப்பாக கவிதையை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் தனித் தன்மையை (individuality or personality) p.sortr முற்பட்டுள்ளேன். படைப்பின் தன்மை இயல்புக் கவிதையில் இரண்டு வகையில் அமையலாம். அஃதாவது வாழ்க்கை நிகழ்ச்சிகள் எப்படியிருந்தனவோ அல்லது எப்படி இருக்கின்றனவோ அப்படியே படைப்பது ஒருவகை. எப்படியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கை (அல்லது எண்ணம்) நிலையில் அமைவது இரண்டாவது வகையாகும். இவற்றில் முதல்வகையை நடப்பியலுடனும் (Realism) இரண்டாவது வகையை தல் லெதிர்கால நம்பிக்கையிலும் (Optimism) அடக்கலாம். நடப்பியல் என்பது முழுமையளவில் அமைந்தால் வெல்லமில்லாத கூழாகத்தான் இருக்கும். ஒருவேளை நாவல் வகைக்கு இத்தன்மை பொருந்தியதாகவும் இருக்கக்கூடும். கவிதையனுபவத்தில் கவிஞனுக்கு நடப்பியல் மட்டும் இருத்தல் சிறக்காது. நல்லெதிர்கால நம்பிக்கையும் இழையோடவேண்டும் (அதற்காக மிகைக் கவிதையாகப் படைக்கவேண்டுமென்ற கட்டாயமில்லே, இவ்வுலக வாழ்க்கைக்கு நடப்பியலுடன் தொடர்புடைய நல்லெதிர் கால நம்பிக்கையும் அமைதல் வேண்டும்) இவ்விரண்டும் இணைந்து செயல்படுமியல்பு திரு நாச்சியப்பன் கவிதை