பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நாச்சியப்பன் களில் பலவிடங்களில் காணமுடிகிறது. கவிதையின் வெற்றிக்கு இத்தன்மையும் ஒரு காரணியாக அமைகிறது. கவிஞரின் பாடுபொருளை வரையறைக்குள் அடக்குதல் இயலாது. சூழ்நிலையுணர்வால் பாடுபொருளும் மாறிமாறி யமையும். இக்கவிதைத் தொகுப்பின்வழி பாடுபொருள் கீழ்க்கண்டவாறு அமைகின்றன எனலாம். 1. இயற்கை 2. மொழிப்பற்று 3. நாட்டுப்பற்று 4. சமுதாயப் பார்வை அ. வாழ்க்கை தொடர்பாவை ஆ. குறைகள் அல்லது சாடல் தொடர்பானவை இ. விழிப்புணர்ச்சி வேண்டுதல்-என்பதாகும் இயற்கையைப் பாடாத கவிஞர் பெரும்பாலும் இருப்ப தில்லையெனலாம். இருப்பினும் இயற்கையைப் பாடும் கவிஞரை இருவகையில் அடக்கலாம். இயற்கையை இயற்கை யாக வருணித்து விட்டுப் போகும்முறை. இயற்கையில்கூட சமுதாயத்தை இணைத்துப் பார்க்கும் முறை. இவ்விரண் டாவது முறையைப் பாரதிதாசனிடம் தெளிவாகக் காண லாம். அடுத்து, திரு. நாச்சியப்பன் கவிதையில்தான் இத்தகு தன்மையைக் காணமுடிகிறது. என்று கூறினல் தவறில்லே. காட்டாக, நிலவைப் பாடவந்தவர் அதனை வர்ணனைக் கவிதையாக (Descriptive poetry) அமைத்து விட்டுச் சென்றிருக்கலாம். இருப்பினும் வானுலகு நிலவின் வருகை பூவுலக மாந்தரின் இயல்போடு ஒப்பிடும் நிலையில், "வாழ்வினிலே முன்னேற்றம் காண வருவார் போல்