பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 35 சூழிருட்டைக் கிழித்துவரும் முழுநிலவைப் பாராய்,' (வட்டநிலா, ப. 105) மேற்கண்டவாறு பாடல் அமைகிறது. கவிஞரின் மொழிப் பற்றினைப் பகரும் வகையிலமையும் பாடல்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். அ. தமிழ் மொழிமொழியின் சிறப்பு கூறுதல் (கனிரசமோ, ப.9) ஆ. தமிழைப் பிறமொழியுடன் இணைத்துத் தமிழின் பெருமையை வலியுறுத்துதல் (தாயும் பேயும், ப.81.) இ. தமிழ் மண்ணின் பெருமையைக் கூறுதல் (முத்துத் தமிழ்நாடு ப. 30-32) ஈ. தமிழ் வளர்த்த பெரியாரைப் போற்றுதல் (மறை மலையடிகளை மறந்திடாதே ப. 24) கவிதை அமரத்துவம் பெறுகின்ற முறை உள்ளத்து உணர்வுகளைச் சித்தரிக்கும் முறையில் இருப்பதாகக் கூறலாம். திரு. நாச்சியப்பன் அவர்கள் கவிதையும் அமரத்துவ நிலையினே அடைகிறது என்று கூறுவதற்கு வாழ்க்கையுடன் தொடர்புடைய காதல், மோதல், வீரம், சோகம் போன்ற பல்வகைப் பாடல்கள் சான்ருக அமைகின்றன. சில செய்திகளைக் கேட்பதற்கு நமக்குப் பிடிக்காமல் தான் இருக்கும். இருப்பினும் புரையோடிப்போன நம் குறைகளை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும், இத்தகு கவிதைகள் குறைகள் அல்லது சமுதாயச் சாடல் வகைக் கவிதைகளாக மலர்ந்திருக்கின்றன. திரு. நாச்சியப்பன் அவர்கள் தாயின் நிலையிலிருந்து குற்றத்தைச் சுட்டிக் காட்டி கவிதைவடிவில் குட்டுவதாகக் கொள்ளலாம். (மறு மலர்ச்சி வீரர், ப. 15) அப்பட்டமாக தம்மை வெளிப்