பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாச்சியப்பன் படுத்துவது நாகரிகமில்லை யென்ருலும் கவிஞனைப் பொறுத்தமட்டில் அஃது தேவையான ஒன்ருக அமைந்து விடுகிறது. குறைகளை மட்டும் சுட்டுபவர் சமுதாய வளர்ச்சியில் பற்றுக்கொண்டவர் என்று கூறுதல் இயலாது. குறைகளைக் களைய தக்கதொரு விழிப்புணர்ச்சியினையும் ஏற்படுத்த வேண்டும். மறுமலர்ச்சி வீரர்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையைப் படிக்கும்போது கவிஞரின் சாடல் என் உள்ளத்தைத் துளைத்தது. நம்மிடமுள்ள குறையினல் குற்ற உணர்வு விஞ்சியது. இரண்டொரு பக்கங்களைப் புரட்டி "தமிழ் முழக்கம் செய்வீர்” என்ற கவிதையைப் படிக்கும் போது...எங்கோ ஊதுகின்ற எக்காளச்சத் தம் கேட்டு போர் மேற் சென்ற வீரர்ககு, வீரப்போதை ஏறுகின்றதைப்போல ஏதோ ஒருவகை விழிப்புணர்ச்சி என் நரமபுகளில் ஊடுருவிப் பாய்வதை உணர்ந்தேன். இத் தன்மையில் பல கவிதைகள் அமைந்துள்ளன என்பது குறிபபிடத் தகுந்ததாகும். திரு. நாச்சியப்பன் அவர்கள் கவிதையைப் படித் துணர்ந்தபோது கீழ்க்கண்ட தனித்தன்மைகள் நிறைத் திருப்பதை உணரமுடிகிறது. கவிதை நடை (Poetic diction) ஆற்ருே ட்டம்போல தங்கு தடையின் றிச் செல்கிறது. அஃதாவது கவிதையைக் கூறும் ஆசிரியர் உருவத்தில் பெரியவராகவும் நாமெல்லாம் சிறு குழந்தையாகவும் இருப்பதுபோன்ற அரவணைப்பு உணர்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் நடை (Style) மிகவும் எளிமையாக உள்ளது என்பதாகும். சொல்லடுக் கினேப் பகட்டிற்காக அடுக்கிச் செல்லும் செயற்கைத் தன்மை இல்லையென்பதைக் குறிப்பாகக் காணமுடிகிறது. இவர்தம் கவிதையைப் படிக்கும்போது உணர்ச்சிப் புயல் (Passitionate) அடிப்பதென்னவோ உண்மைதான்.