பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* o 尊 * o நாச்சியப்பன் பாடல்கள் (முதல் தொகுதி) தினமணிச் சுடர் 14.12-80 இதழில் வெளிவந்த மதிப்புரை முப்பத்து ஐந்து ஆண்டுகளாகத் தொடரும் நாரா நாச்சியப்பனின் கவிதைப் பணி முழுமை பெற்று வீதியுலாப் புறப்பட்டுள்ளது. பிற மொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து, தொடர்களைக் கண்டபடி பிரித்துப் பக்கங்களை நிரப்பிக் கவிதை இதுதான் எனப் புறப்படும் புற்றீசல்களின் நடுவே, தறி கெட்டுப் போகும் இலக்கியக் கலங்களை இலட்சியக் கரைக்கு அழைக்கும் கலங்கரை விளக்கமாக இவர் பாடல்கள் உள்ளன. இயற்கை அழகும், உவமை நயங்களும் இன்பச்சுவையும் உலகியலும் பின்னிப் பிணையும்போதே கவிதைகள் உயிரூட்டம் பெறுகின்றன. புதுமைப்பண்பு பொலிகின்றன. எப்போதும் சிள் வண்டின் ஒசை கேட்கும் இடையிடையே காய் சருகு சலசலக்கும் கொப்போடு கிளைமுறியும் ஓசை கேட்கும் குமுறிவரும் காட்டாற்றின் சீற்றம் கேட்கும் எப்போதோ புலி உறுமும் சத்தம் கேட்கும் இடையிடையே யானைகளோ பிளிறியோடும்! என்று தாமரையாள் சொல்கின்ற காட்டைக் கவிஞர் பாடும்போது நாமே அக்காட்டில் நடப்பது போன்ற உணர்ச்சி தோன்றுகின்றது.