பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 முன்னைய கவிஞர் சொல்லிச் சொல்வி நைந்து போன உவமைக் கந்தல்களைத் தள்ளிப் புதுப்புது உவமைகளைக் கவிதைத் தாய்க்குச் சூட்டியுள்ள பாங்கு வியத்தற்கு உரியது. காலகண்டன் வந்தக்கால் கட்டிமார்க் கண்டேயன் ஒடிச் சிவலிங்கம் ஒன்றித் தழுவினுற் போல் என்ற இடத்துப் பழைய செய்தியே உவமையாகிப் புதுமை வடிவம் கொள்வதைக் காண்கின்ருேம். பூத்தமலர் பேய்க்காற்றில் பொன்னிதழைப் போக்கடித்து மீத்து நிற்கும் காம்பே போல் 'பேன் ஒன்று கூந்தலுக்குள் நுழைந்தாற் போல’ பட்டுப் பட்டெனப் பட்டாசு விட்டது போல் இவ்வாறு புத்தம் புதிய உவமைகள் பக்கம் தோறும் பலப்பல நின்று நம் மனத்தைப் பிணிக்கின்றன. சென்னைக் கடற்கரையில் சிற்றலையும் பேரலையும் ஒன்றன்பின் ஒன்ருக ஒடித் தொடர்ந்து வந்து மோதிக் கரை மணலை முத்திப் பணித்தங்கே வேதன் அடியார் போல் வீழ்ந்து மறைந்தனவே வந்த அலை மறைய வாரி துரை எழும்பிப் பிந்தி வரும் அலையும் பின்னும் மறைந் தொழியும்