பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 என்ற அடிகளைப் படிக்கும் போது கடலலைகளோடு கவிதைப் பெருக்கும் நம் இதயமாகிய கரையை மோதுகின்றது. தொட்ட தொட்ட இடமெங்கும் சுவைகள் சொட்டச் சொட்டக் கவிபாடும் ஆற்றல் தமக்கு உண்டு என்பதை நாச்சியப்பன் ஒவ்வொரு பாடலிலும் நிரூபணம் செய் துள்ளார். வழக்கில் பயிலாத அருஞ்சொற்களே இல்லாமல் படித்தவுடனே மனத்தில் பதிந்துவிடுகின்ற அழகுத் தமிழ்ச் சொற்களால் ஆன அமுதக் கலசம் இது. பாடல்கள் எழுதி வெளியிடுவது சந்தையில் விலை போகாத சரக்கை உருவாக்குவது போலாகும் என்கிருர் கவிஞர். இக்கருத்து இப்பாடல்களுக்குப் பொருந்தாது. இது விலை போகும் சரக்கு மட்டும் அல்ல. இலக்கிய உலகுக்கு இன்றியமையாத சரக்கு. கதைகள் எழுதினேன் கைச் செலவுக்கு, பாடல்கள் எழுதினேன் மனநிறைவுக்கு என்கின்ருர். யாருடைய மனநிறைவுக்கு என்று குறிப்பிட வில்லை. வாசகர்களின் மனநிறைவுக்கே இப்பாடல்கள் எழுதியுள்ளார் என்பதே பொருந்தும். இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் கதையும் அமரகாவியம், அழகு ஒவியம். கவிதை எழுதத் துடிக்கும் இளைஞர்க்கு வழிகாட்டி. அத்தனை யும் கற்கண்டு! அதனைப் புகழ்வது எச்சொற் கொண்டு? -அரங்க சீனிவாசன்