பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பு குயில்கள் பூமாலைகளை எதிர்பார்த் துக் கூவுவதில்லை. - அருவிகள் யாருக்காகவும் தாளம் போட்டுக் கொண்டு குதிப்பதில்லை. மயில்கள் கைதட்டுதலே எதிர்பார்த் துத் தோகை விரித்தாடுவதில்லை. அவை தம்முள் ஏற்பட்ட இன்ப உந்துதலின் காரணமாகச் செயல்படு கின்றன. ஒரு புலவனின் கருத்துாற்றுக்களும் இவற்றைப் போலவே நெஞ்சுள் பொங் , ుజ్జీ கும் உணர்ச்சியின் உந்துதல் காரண క్ష్ மாகப் பாடல்களாய் வெளிப்படுகின்றன. క్స్ట - ஆளுல் ஒரு வேற்றுமை. பாராட்டுக்கள், புலவனின் ஊற்றுக் கண்னேக் கிளறி விட்டு அகலமாய், ஆழமாய் ஆக்கி விரைவாய்ப் பெரிதாய் இடையருது, தொடர்ந்து பாயச் செய்யும் மந்திரக் கருவி களாய் விளங்குகின்றன. பாராட்டுக்கள் கிடைக்காமல் பல ஊற்றுக் கண்கள் அடைபட்டுப் போய் இருக்கின்றன. போற்றுவார் இல்லாமல் பல ஊற்றுக்கள் ஊறுந் தன்மையை இழந்திருக்கின்றன. புகழ் மாலைகள் தொடர்ந்து விழுந்ததன் காரணமாகப் பல புலவர்கள் காப்பிய உலகில் வியக்கத்தக்க பெரும் விந்தைகளை ஆக்கியிருக்கின்றனர் .