பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த்தாய் வணக்கம் நல்ல தமிழ்நூல் நடையெழுத நீயெனக்கு வல்லமைதா வென்று வணங்கினேன்-தொல்லைப் பலகாலந் தொட்டுப் பருவங் குலையா திலகுதமிழ்த் தாயே இனிது என்றும் உனது புகழ் யான்பேச வேண்டுமென நின்று தொழுகின்றேன் நீயருள்வாய்-தொன்று முதலாகத் தோன்றி முடிபுனேந்து பாவோர் இதழ்வாழும் தாயே இனிது உலக மொழியெல்லாம் உன்னடியில் தோன்றி இலகும் எழில்கண்டேன் இன்ப-நலமிக்க ஆதித் தமிழே அழியாத தத்துவமே சோதிப் பொருளே துதி. காலை மலரின் கவினழகும் கற்பகப்பூஞ் சோலைக் கனியின் சுவைநயமும்-ஆலயத்துத் தெய்வ அருளும் திருவும் இலங்குமணிப் பைந்தமிழே வாழ்த்துமென் பாட்டு பொங்கல் படைத்துப் புதுமகிழ்ச்சி வெள்ளத்தில் எங்கும் தமிழர் இனிதிருக்கத்-தங்கத்தாய்ச் செந்தமிழே கன்னித் திருவேஉன் சீர்பரப்பிச் சிந்தை மகிழ்வோம் சிரித்து! நா-1