பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 3 பொய்யும் புரட்டும் புதுவாழ்வு சேர்க்குமென நையும் தமிழர் நலங்காண-மெய்யறிவைத் தந்துகாப் பாற்றத் தமிழே அருள்பொழியச் சிந்தை செலுத்து சிறிது. அன்பு மொழியாலே நெஞ்சை அணைக்கின்ற இன்பத் தமிழே எழில்வடிவே-உன்புகழைப் பாடுகின்ற போதெல்லாம் பாய்கின்ற இன்பத்தால் ஆடுகின்ற தென்றன் அகம். தென்னகத்தைச் சேர்ந்திருக்கும் செந்தமிழர் வாழ்க்கையிலே முன்னேறும் போதெல்லாம் மூளுகின்ற-இன்பத்தை இங்குன்னை விட்டிங்கே யார்க்குரைப்பேன்; ஆற்றுக்குப் பொங்கு கடலே புகல். வள்ளுவனைப் பெற்று வளர்த்த மடிதனிலே துள்ளிவிள யாடும் துடிப்புடைய-பிள்ளை நான் தோன்றியதை எண்ணுங்கால் தோன்றும் பெருமையிலே ஊன்றி நிலைத்த துவப்பு. பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழ்ன்று! எண்ணி முயன்ருல் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க - மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை.