பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியப்பன் பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்ருேர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது எங்கும் தமிழாய் எதிலும் தமிழேயாய் மங்கா திலங்கி மதிப்புயரச் - சிங்கத் தமிழன் என வாழும் சீரான வாழ்வுக் கமிழ்தென் ருெருபெயருண் டாம் ! பெற்றெடுத்த பிள்ளையுடன் பேசிக் களிப்பதற்கு மற்ற மொழிதேடி மாய்வாரே ! - உற்ற வளங்கொழிக்கும் அன்னை வழிமொழியை நாடா திளங்குருத்திற் சூடேற்றி யாங்கு ! - பூவுலகில் பேரறிஞர் புத்தாக்கம் செய்வதெலாம் நாவுலவு செந்தமிழில் நல்ல பெயரிட்டுக் கூற வியலாதாம் ! கோணல் மனங்கொண்டார் சீரு துருரே தெளிவு நல்ல தமிழிருக்க நாடிப் பிறமொழியை வல்லே வழங்கி வழக்காடும் - புல்லர்களைச் சேரா திருக்கநான் செந்தமிழே என்தாயே ! வாராய் துணையாக வா. அறிவு பயத்தலால் அன்பு வளர்த்துச் செறிவு நிறைத்தலால் செந்தேன். இறுகியாங்கு என்றும் சிறத்தலால் என்தாய்த் தமிழின்வே ருென்றும் கொளாதென் உளம்.