பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாச்சியப்பன் முடிமன்னர் மூவருக்கும், முன்வாயில் வந்து படிமிதித்த ஏழை பசிதீர்க்கும் வள்ளலர்க்கும் நல்லன்னே யாகி நலம்புரியும் செந்தமிழே ! பல்லுலகும் போற்றும் பழந்தமிழே வாழ்த்து ! கனிபோலே நல்ல கனிரசத்தைப் போலே இனிதான செந்தமிழே ! எங்கள் பெருந்தமிழே ! கற்கண்டு போலே கருப்பஞ்சாற் றைப்போலே சொற்சுவையும், சொல்லின் பொருட்சுவையும் சொக்கும் கவிச்சுவையும் சேர்ந்திருக்கும் கற்பனையைக் காட்டும் சுவையமுதே தித்திக்கும் சொல்லோ வியமே ! அறப்புலவர் சான்ருேர் அணிவகுத்து நின்று புறங்காக்க வாழ்வடைந்து புல்லறி வாளர்களின் சூழ்ச்சி தவிடாக்கித் தொன்றுமுதல் இன்றுவரை வீழ்ச்சியின்றி வாழ்ந்து விளங்கும் பெருமாட்டி ! என்றும் இளமையினை ஏற்றுத் திகழுகின்ற தென்றமிழ்த் தாயே 1 நற் றேன்பெருக்கே நல்வாழ்த்து ! பொய்யா நெறிகாட்டிப் புத்துலக வாழ்க்கையினைச் செய்தாயே வாழ்க சிறந்து.