பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாச்சியப்பன் சின்னதாம் முத்துத் தானும் சிறந்தொளி வீசு தல்போல் உன்னருங் குறளி ளுலே உலகெலாம் புகழ்ப ரப்பித் தென்றலாய் வந்தென் னுள்ளிற் றேனென ஒடு கின்ருய் இன்றமி முன்னய் ! யானிங் கினிதுன வாழ்த்து கின்றேன். எத்தனை யணியி ழந்தாய் எதிர்த்திடும் பகைவராலே சித்தம்நீ கலங்க வில்லை . சேய்களோ அஞ்ச வில்லை பித்தங்கொண் டலையு மந்தப் பேயினப் பகைவர் தம்மைச் சித்தத்தில் அச்சங் கொள்ளச் செய்தஎன் அன்னய் வாழி ! யாவும் தமிழே ! அன்னேதரும் பாலமுதம் செந்தமிழே -அவள் அன்பு முத்தம் அத்தனையும் செந்தமிழே ! என்னுயிரும் என்னுணர்வும் செந்தமிழே - உள் இழைத்துவரும் மூச்செல்லாம் செந்தமிழே ! பன்னுமொழி அத்தனையும் செந்தமிழே - நான் பாடுமிசைப் பாட்டெல்லாம் செந்தமிழே ! தென்னகத்து வீதியெலாம் செந்தமிழே - உளம் தேடுகின்ற உறவெல்லாம் செந்தமிழே !