பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்ற வேண்டியவற்றைப் போற்றும் தூய மனம் எல்லாரிடமும் இருப்பதில்லை. அந்த மனம் குறிப்பிட்ட சிலரிடம் இருப்பதால்தான், உலகில் பல திறன்கள் ஒளிவீசுகின்றன. பல்துறையிலும் புதிய ஆக்கங்கள் உருப்பெறுகின்றன. பாட்டெழுதும் ஆர்வத்தை என்னிடம் வளர்த்தவர் களிலே குறிப்பிடத்தகுந்தவர் பொன்னி ஆசிரியர் முருகு கப்பிரமணியன் அவர்களேயாவர். தமிழ் நாட்டில், தமிழ் இனப்பற்றுள்ள பல எழுத்தாளர் களையும் கவிஞர்களையும் இலக்கிய உலகில் புகழ் பெற்று நிற்கச் செய்தவர் முருகு அவர்களேயாவர். பொன்னி’ இதழின் மூலம் என்னைத் தமிழ்ப் பாவலளுக அறிமுகப்படுத்திய முருகு அவர்களுக்கு என்றும் நன்றி யுடையேன். இருபதாண்டுகளுக்கு முன் சில பாடல்களுக்கு அறிஞர் கா. அப்பாத்துரையார் அவர்களும் வேறு சில பாடல் களுக்கு டாக்டர் அ. சிதம்பாநாதச் செட்டியார் அவர்களும் வழங்கிய கருத்துரைகளைப் பெருமையோடு இங்கே வெளி யிடுகிறேன். சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர். டாக்டர் இளவரசு அவர்கள் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். தமிழ் மறவரான அன்னரின் பாராட்டுக்கும் நன்றியுடையேன். உலகத்தமிழாராய்ச்சிநிறுவனத்தைச்சேர்ந்தவர்களான உயர்நிலை ஆய்வாளர் டாக்டர் க. காந்தி அவர்களின் கருத்துரையும், ஆய்வாளர் திரு இரா. பாலசுப்பிரமணியம் எம். ஏ., எம். ஃபில் அவர்களின் ஆய்வுரையும் இந்நூலுக்கு