பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் கனிரசமோ? கனிரசமோ ? பாகோ ? அடிக் கரும்பின் சாருே ? தேனே ? கனிரசமோ ? பாகோ ? நனி யுவப்பை யுள்ளத்தில் நாட்டும் செந்தமிழ் நாம் விரும்பிக் குடிக்கும் அமுதோ ? கனிரசமோ ? பாகோ ? காவியம் என்னுமோர் பானையில் வைத்துக் கவிதையாய்ப் பொழிந்த தெள்ளமுதோ ? ஆவியைக் கவர்ந்திடும் உவமை யணியின் அழகெலா மடைந்ததும் எவ்வாருே ? கனிரசமோ ? பாகோ ? எத்தனை மெல்லியள் செந்தமிழ் மங்கை இன்பத்தின் ஊற்றென நின்றவளே சித்தத்தில் தேக்கிடும் புத்தமு தெல்லாம் சேர்த்தெடுத் தோதுவ தெவ்வாருே ? கனிரசமோ ? பாகோ ? நாடகத் தமிழென ஆடினுள் ஆடி நல்லிசைப் பாட்டெனப் பாடினுள் இயலில் ஒடினுள் கடல்கடந் துலவிள்ை எங்கும் உற்றிடும் வெற்றியில் முழக்கிள்ை வீரம் . கனிரசமோ ? பாகோ ?