பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 11 தமிழ் மறவர் மறவர் என்ற சொல் தமிழரைக் குறிக்கும்-இந்த மாநிலம் தமிழர்கள் சொற்படி குதிக்கும்! மறவர் என்ற சொல்...... பெண்ணுக்கு மானுக்கும் வேற்றுமை யின்றிப் பிறைபோற் கத்தி,வில் வழங்குமிந் நாட்டில் மறவர் என்ற சொல்..... எங்கள் வண்டமிழ் இகழ்ந்தவன் யாரே என்றெழுந் தோடும் செங் குட்டுவன் மாரே மங்கை கண்ணகி வீறுளம் மகிழ மார்தட்டிப் போருக்குப் புறப்படும் நாட்டில் மறவர் என்ற சொல். பரணிகள் ஆயிரம் பாடியெம் வீரம் பாருக்குக் காட்டிடும் பாவலர்க் காரம் தருவது தானெங்கள் வெற்றியின் விளைவாம் தாரணி தானெங்கள் போர்க்களம் ஆமாம்! மறவர் என்ற சொல்...... தேர்விடு வானெரு சேயவன் தோளும் தெவ்வரை யடக்கிடும் அம்பு, வில், வாளும் பேருக்கும் பிரிவினை யடைந்தது மில்லை பேச்சென நினைப்பவர் நேர்வத்து பாரீர் மறவர் என்ற சொல்......