பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாச்சியப்பன் தமிழ் மன்னர் வில்லும் புலியும் மீனுங் கொண்டு-வென்று விளங்கினர் தமிழ் மன்னர் பண்டு வில்லும்... அல்லும் பகலும் தமிழ் ஆர்வத்தினலே அவர் செய்த போர்கள் பல்லாயிர மாமே! வில்லும்... பாண்டியன் ஆரியப் படைகடந்தான் பல்கடலும் தாண்டி வளம் கொணர்ந்தான் ஆண்டநற் செல்வங்கள் கடற்படை யாலே அதை விளக்கத் தக்ககுறி மீன் கொடிதானே வில்லும்...... சோழனே தோள்வலி மிக்குடையாளும் சோறுணும் ஆரியர் இமயம் வென்முளும் வாள் வீசிப் புலி பாய்வதைப் போலே வருவதைக் காட்டுதல் புலிக்கொடிதானே வில்லும்...... - சேரன் தமிழ் மண்ணைப் பழித்த ஆரியரைச் சென்றடக்கி வென்றுவந் தானன்ருே முன்னே வீரத்தில் விண்முட்டும் புகழ்கொண் டானிதை விளக்கிக் காட்டுதல் விற்கொடிதானே வில்லும்......