பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிாடல்கள் - 13 யாரிடம் போய்ச் சொல்வேன்? செந்தமிழ் நாட்டு வரலாறு-நீ தெரிந்துகொள்ள வேண்டுமடா தம்பி வந்த எந்த நாட்டினர்க்கும்-வாழ்த்தி வரவேற்பளித்த நாடிதடா தம்பி! (செந்தமிழ்) சிங்களந் தன்னை ஆண்டதுண்டு-அயல் சீனரின் நாட்டில் வாணிபம் செய்து தங்கமும் பொருளும் சேர்த்ததுண்டு-தல்ல தமிழ் நாட்டின்புகழ் ஆர்த்ததுண்டு பாரில்! (செந்தமிழ்) ஆருயிரங்கல் தொலைகடந்து-கடல் அலைகடந்தே அயல்நாட்டினரோடு சீராய் வாணிபம் செய்தனரே-புவிச் செல்வ மெல்லாம் குவித்தனரே நாட்டில்! (செந்தமிழ்) போரென வந்த வீரர்களை-மாய்த்துப் புகழினை ஏற்கச்செய்ததுண்டு தமிழர் வீரம் பேசிய வீணர்களே-அடித்து வீழ்த்திப் புகழுற வாழ்ந்தவரும் தமிழர்! (செந்தமிழ்) போரின் முரசைக் கேட்டவுடன்-செம் புலியெனப் பாய்ந்து குதித்திடும் வீரர் யாரும் இரந்திட வந்துவிட்டால்-தீம் பாகென இளகிடும் நெஞ்சுடைய தோழர் - - (செந்தமிழ்)