பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாச்சியப்பன் கொடையிற் சிறந்த குமணனென்பார்-அவன் கொண்ட கொள்கை இரக்கமெனச் சொல்வார் படையிற் சிறந்த செங்குட்டுவனே-இந்தப் பார்முழு தேத்தும் வீரனடா தம்பி! (செந்தமிழ்) ஆரியப்படையைக் கடந்தவன்-வெற்றி ஆக்கிய மன்னன் நெடுஞ்செழியன் கண்டாய் வாரி வழங்கிய பாரி வள்ளல்-தனை மாரி யென்றே புகழ்ந்திடுவார் கற்ருேர் (செந்தமிழ்) ஒளவைக் கிழவியின் பாட்டாலே-நல்ல அறமும் நெறியும் வளர்ந்ததுண்டு நாட்டில் செவ்விய திருக்குறள் ஏட்டாலே-புவி செம்மை அமைந்திட வழியுண்டு கண்டாய் (செந்தமிழ்) நெஞ்சை யள்ளும் காவியங்கள்-நல்ல நீதி நூற்கள் பற்பலவும் எழுதி கொஞ்சமுங் குற்ற மில்லாதே-உயர் கொள்கைகொண்டு வாழ்த்தனரே தமிழர் (செந்தமிழ்) கொட்ட மடித்த வெள்ளேயார்க்கே-வரி கொடுக்க மறுத்துப் போரிட்ட வீரன் கட்டபொம்மனின் பெயர் சொன்னுல்-இரு கைகளும் வாளினை ஏந்திடத்துடிக்கும் (செந்தமிழ்) வெள்ளைய ராட்சியை எதிர்த்தவராம்-உயர் விடுதலைக்கே உழைத்தவராம் நெஞ்சிற் கள்ளமில்லாத சிதம்பரளுர்-அவர் கப்பலோட்டிய தமிழரடா தம்பி! (செந்தமிழ்) எத்தனை நல்ல செய்திகளும்-நம் இந்திய நாட்டு வரலாற்றில் இல்லை அத்தனை செய்தியும் இருட்டடித்தார்-இந்த அவமானத்தை யாரிடம் போய்ச் சொல்வேன்? (செந்தமிழ்)