பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 15 மறுமலர்ச்சி வீரர் மறுமலர்ச்சி யெழுத்தாளர் கூட்ட மென்று மார்தட்டி அரங்கேறும் இளைஞர் காள் நீர் குறும்பு செயும் நோக்கமென்ன? பண்டி தர்தம் கூட்டத்தை இகழ்வுசெயும் நோக்கமென்ன? குறுகுமணப் பான்மையினை யெதற்குக் கொண்டீர்? குப்பைகளாம் புராணங்கள் இந்த நாட்டில் சிறப்படையப் பண்டிதர்கள் செய்தா ரென்ருல் செழிப்படையச் செய்ததலால் வேறென் செய்தீர்? பண்டிதர்போல் நூல்கள் பல படித்ததில்லை பார்த்த தில்லை பழந்தமிழர் இலக்கியங்கள் மண்டையிலே இலக்கணமோ பதிவ தில்லை மரபுவழா மற்பேசத் தெரிவ தில்லை கண்டகண்ட புராணத்தைக் கதை கதையாய்க் கதைக்கின்றீர் கொச்சைமொழி அடுக்கி வைத்து! தொண்டுகொலோ தமிழ்மொழிக்கு நீங்கள் செய்தல் துரோகமன்ருே? சற்ருழ்ந்து சிந்திப் பீரே! பழந்தமிழர் இலக்கியங்கள் அறியீ ரென்ருல் படித்தவரை ஏணிகழ்வு செய்கின் lர்கள்? அளக்கவொரு வம்புமின்றி ஊர்க்கதைகள் அளப்பவனைப் போல்நீவிர் கற்பனைதான் உளத்துாற வில்லையெனில் புராணத்திற்கே உருவமொன்று புதிதாகக் கொச்சைப் பேச்சில் அளிப்பதனால் தமிழ்நாட்டில் குப்பை கூடும் அதுவேண்டாம் பேளுவை மூடி வைப்பீர்!