பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நாச்சியப்பன் இலக்கியங்கள் கற்ருலும் கற்க வில்லை என்ருலும் அதுபற்றிக் கவலை யில்லை விலைக்குவரும் உங்கள் நூல் தமிழ்ச் சிறப்பை விளக்குமெனில் புதுமையெனில் ஆதரித்துத் தலைக்கேற்றித் துக்கிவிடப் பண்டிதர்கள் தாமுதலில் வருங்காலம் துரத்தில்லை! மலேக்குப்பை வளர்ப்பதெனப் புராணப் பாட்டை மக்களிடைப் பரப்பாதீர் ஒதுங்கிப் போவீர்!. மானிடரின் அறிவுயர்வைக் காட்டி நம்மை . மலைக்கவைக்கும் காப்பியங்கள் துறைப்பா டல்கள் தேனைவிட இனிதெனும்பல் இலக்கியங்கள் திருநாட்டில் மலிந்திருக்கப் புராண மென்னும் கூனியைப்போய்ப் புணர்கின்ருர் பண்டிதர்கள் குள்ளமனப் போக்குங்கள் உள்ளம் விட்டுப் போனதில்லை! பண்டிதர்க்குப் போட்டியானிர் போட்டிமனப் போக்கிலவர் மேற்பாய் கின்றீர்! குப்பைகளைப் பெருக்குவதில் போட்டி போடும் கூளங்காள்! பண்டிதர்காள், மறு மலர்ச்சிச் சிப்பாய்காள்! உமக்கெல்லாம் சேதி யொன்று சிந்திப்பீர், சிந்திப்பீர்! நாளும், நாளும் தப்பான வழிச்சென்றீர் இனிமே லேனும் தமிழென்றல் சிந்தனக்கு விருந்தளிக்கும் நற்பாடல் எனுமுண்மை மக்கள் மன்றில் நாட்டிடுவீர்! புகழடைவீர்! வாழ்க நன்றே!