பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-2.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் 1. செந்தமிழ் வேண்டும் பிழையறத் தமிழை எழுதிடும் பழக்கம் பெருமை தரும் நற் பழக்கம். இளையரும் முதியோர் யாவரும் இன்றே ஏற்றிடத் தக்க பழக்கம். தாய்மொழி என்ற காரணத் தாலே தள்ளிவைத்திடு வீரேல் வாய் மொழி யாகும்; வளர் மொழியாகா வகையற்றிடும் நாளடைவே எழுத்தொடு பேச்சே என்றுஞ் செந்தமிழாய் இருப்பது பெருமை சேர்க்கும் வழுத்திடும் வீதிப் பேச்சொடு நின்ருல் வளர்ச்சி இருந்தி டாதே ! இலக்கணம் கற்ருன் இனிய சொற்பொழிவே எவரையும் தன்பால் ஈர்க்கும் தலைக்கணம் கொண்டான் வழிநடை மொழியோ தவறிய நெறியில் சேர்க்கும். திருக்குறள் ஒன்றே உலகம ளாவித் திகழ்ந்திடும் செய்தி யறிவீரே நரிக்குற வன்பேச் சுலகொப்பிடுமோ நன்கு சிந்தித் துணர்வீரே ! நா. 2